சமீபத்தில் ரியல்மி நிறுவனத்திடம் இருந்து அறிமுகமான ரியல்மி நார்சோ 10 தொடர் ஸ்மார்ட்போன்களின் வெற்றியை தொடர்ந்து ரியல்மி நார்சோ 20 தொடர் ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாத வாக்கில் அறிமுகம் என்கிற அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நார்சோ 10 தொடரின் அப்கிரேடட் ஸ்மார்ட்போன்கள் வரும் மாதங்களில் தொடங்கப்படும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, நிறுவனத்தின் நார்சோ ட்விட்டர் அக்க்கவுண்ட் ஆனது எந்த விவரமும் இல்லாமல் நார்சோ 20 தொடர் ஸ்மார்ட்போன்களை டீஸ் செய்தது
கடந்த மாதத்தின் பிற்பகுதியில், நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டரின் வழியாக வெளியான ஒரு தகவலின்படி, ரியல்மி நர்சோ 20 தொடரில் ரியல்மே நார்சோ 20 மற்றும் ரியல்மே நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடங்கும். அதாவது முன்னர் வெளியான ரியல்மி நார்சோ 10A க்கு பதிலாக நார்சோ 20A என்கிற மாடல் வெளிவராது, மாறாக நார்சோ 20 ப்ரோ வரும் என்று கூறி உள்ளார். நர்சோ 20 தொடரில் ஏற்கனவே இருக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு, ரியல்மி வாட்ச் எஸ் ப்ரோவை பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த அறிவிப்பின் போது, ரியல்மி தனது 55-இன்ச் டிவி, வயர்லெஸ் மற்றும் டி.டபிள்யூ.எஸ் ஏ.என்.சி இயர்போன்ஸ், ஸ்மார்ட் கேமரா, ஸ்மார்ட் பல்பு மற்றும் நடுத்தர மற்றும் உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் மூலம் தனது AIoT வரிசைகளை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்துள்ளது.