ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா என்னும் அம்மா அவர்கள். இவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படம் தான் பாலிவுட் திரையுலகை சேர்ந்த கங்கனா அவர்கள் நடிக்கும் தலைவி.
இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனா போது மக்கள் பெரும் ஆரவாரத்திற்கு உள்ளானார்கள். அதை தொடர்ந்து தலைவி படகுழுவினரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.
தற்போது வெகு நாட்களுக்கு பிறகு படக்குழுவினரிடம் இருந்து ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.
தலைவி படமானது பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருக்கவேண்டிய திரைப்படம். கொரோனா ஊரடங்கு காரணங்களால் திரைப்படம் வெளிவராமல் இருக்கின்றது.
இந்த திரைப்படத்தின் இயக்குனர் தலைவா, தெய்வத்திருமகள் போன்ற பல வெற்றி படங்களை இயற்றிய ஏ. எல். விஜய் அவர்கள். இவர்களின் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ்பட்டிணம் போன்ற காலப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தது.
அதேபோன்று தலைவி படமும் சர்ச்சைகளுக்கு இடையே பெரும் வெற்றி அடையும் என எதிர்ப்பார்க்க படுகிறது. மேலும் இதில் நம் அனைவரின் மனதை கொள்ளைகொண்டு காலத்தால் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றத்தில் அரவிந் சாமி நடித்துள்ளார்.
இந்நிலையில் தலைவி படக்குழு புதிய போஸ்டர் ஒன்று வெளியிட்டு அத்துடன் சேர்ந்து படம் வெளியாகும் தேதியையும் அறிவித்துள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி ‘தலைவி’ திரைப்படம் வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சில மாதங்கள் கழித்து திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளதால். மக்கள் அனைவரும் ஆர்வத்தில் உள்ளனர்.