ரெண்டே ரெண்டு வாட்ச் 5 கோடியாம்… ஹர்திக் பாண்டியாவின் வாட்சுக்கள் விமான நிலையத்தில் பறிமுதல்!!

துபாயில் இருந்து தாயகம் திரும்பியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை, மும்பை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இரண்டு வாட்சுகள் இருந்துள்ளது. அதில் ஒன்று தங்க வாட்ச். இரண்டும் விலையுயர்ந்த புதிய வாட்ச்சுகள் ஆகும். அதை ஒன்றை கையில் கட்டி இருந்துள்ளார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்துள்ளது. இதன் இரண்டின் மதிப்பு மட்டும் 5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தளவு விலைமதிப்புள்ள வாட்சுகளை வாங்கியதற்கான ரசீதை சுங்கத்துறையினர் கேட்டுள்ளனர். ஆனால் ஹர்திக் பாண்டியாவிடம் இதற்கான ரசீது இல்லை. இதையடுத்து அவரின் வாட்ச் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய ரசீது இல்லாமல் அதிக மதிப்புள்ள தங்கத்தினை எடுத்து வந்த காரணத்திற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version