மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
அரசுப்பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது போன்று அரசுப் பணிகளில் பதவி உயர்வின்போது மொத்தம் உள்ள இடங்களில் 4சதவீதத்துக்கு குறையாக இடங்கள் மாற் றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தும் விதமாக அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பார்வையற்ற மற்றும் குறைந்த பார்வைத் திறன் உடைய வர்கள், செவித்திறன் அற்றவர்கள் மற்றும் குறைந்த அளவு ஒலியை உண ரும் திறன் பெற்றவர்கள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர் – சக்கர நாற்காலிகள் உதவியுடன் தினசரி வாழ்வை நகர்த்துவோர், ஆட்டிசம் -அறிவுத்திறன் குறைபாடு – கற்றலில் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு உடையோரை மாற்றுத்திறனாளிகளாகக் கருதி பதவி உயர்வுக்கு அவர் களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுளளது. இதை கண்காணிக்க மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் துறை ஆணையர் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையின் தலைமை அலுவலர்கள் நோடல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நோடல் அதிகாரிகள் இது தொடர்பாக அறிக்கையை ஒருங்கிணைப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
