தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிலும் முககவசம் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கொரானா நோயாளிகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் மாநகராட்சி சார்பாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் நோட்டிஸ் ஒட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.