தீ அணைக்க உதவும் ரோபோக்கள்-மேற்கு வங்கத்தில் புதிய முயற்சி

மேற்கு வங்க தீயணைப்புத் துறையினர் 4 ரோபோட்டுகளை வாங்கி உள்ளனர்.இந்த ரோபோட்டுகள் மனிதர்கள் செல்ல முடியாத இடத்திலும் சென்று தீயை அணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து நடைப்பெறும் இடங்களில் அதிக வெப்பநிலை இருப்பதால் தீயணைப்புத் துறையினரால் நுழைய முடிவதில்லை.எனவே அந்த இடங்களில் தீயை அணைக்க இந்த ரோபோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை ஒட்டம் பரேட் மைதானத்தில் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

புதிய ரோபோட்டுக்கள் பற்றி அமைச்சர் கூறுகையில்,சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளது.முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.தீ ஏற்பட்ட இடங்களில் ரோபோட்டுகள் செயல்படுவதை தூரத்திலிருந்து திரையில் காணலாம்.100 மீட்டர் தூரத்தில் இருந்து இவ்வகை ரோபோட்டுகள் செயல்படும்.இந்த ரோபோட்டுகளில் இருக்கும் தண்ணீர் குழாயில் தண்ணீர் இணைக்கப்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடுக்கும்.அதில் அதிநவீன பல்புகள் கேமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளது.இந்த வகை ரோபோட்டுகளை ரிமோட் மூலமாகவும் இயக்கல்லாம்.

இந்த ரோபோட்டுகளை பயன்படுத்தி 80-100 அடி உயரம் வரை தண்ணீரை பீய்ச்சி அடிக்கலாம்.ஒரு முறை சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் செயல்படும்.தெர்மல் வெப்பமானியும் இந்த ரோபோட்டுகளில் இணைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version