ரோகித் தாமோதரன் – ஆல்-ரவுண்டராக அசத்தும் தமிழக இளம் புயல்!

ரோகித் தாமோதரன் – தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரும், தொழிலதிபருமான தாமோதரின் மகன், தமிழ் இயக்குநர் ஷங்கரின் மருமகன் என்று பல்வேறு பெருமைகள் இருந்தாலும், இவருக்கே உரிய தனித்துவம் ரோகித் தாமோதரன் ஒரு கிரிக்கெட் வீரர். அதிலும் பேட்டிங் ஆல்-ரவுண்டர்.

ரோகித் தாமோதரன்

கடந்த 2012-ம் ஆண்டு லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான இவர், புதுச்சேரி அணியில் இடம்பிடித்தார். 2018-ம் ஆண்டு முதல் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை போன்ற டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாட புதுச்சேரி அணி புதிதாக சேர்க்கப்பட்டது. அப்போதில் இருந்து ரோகித் புதுச்சேரி அணியின் கேப்டனாக உள்ளார்.

இதைத்தவிர, 2016-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அளவில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ரோகித் 2018-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில், மதுரை பாந்தர்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி, இறுதி போட்டி வரை அழைத்துச் என்றார்.

மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்ட மதுரை பாந்தர்ஸ், போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது. டிஎன்பிஎல் வரலாற்றில், மதுரை அணியின் முதல் கோப்பையை வெல்ல வழிவகுத்தவர் கேப்டன் ரோஹித்தான்.

ரோகித் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் விளையாடி 1551 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்சரன்னாக 138 ரன்கள் எடுத்தார். 2 முறை சதமும், 1 முறை அரை சதமும் விளாசியுள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 701 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 555 ரன்களும் சேகரித்துள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 29 விக்கெட்டுகளும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளும், டி20யில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Exit mobile version