உயிருடன் இருந்தவரைக் இறந்ததாகக் கூறி சவப்பெட்டியில் வைத்துக் கட்டிய தம்பி.
சேலம் மாவட்டத்தில் உயிருடன் இருந்த முதியவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து உயிரிழப்பதற்காக குடும்பத்தினர் காத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஹவுசிங் போர்ட் பகுதியில் வசிப்பவர் பால்சுப்பிரமணியகுமார்( 78). இவர் தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்களன்று அவர் இறந்துவிட்டதாகக் கூறி பால்சுப்பிரமணியகுமாரின் உடலை குளீரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்துள்ளார்.
பின்னர் பெட்டியைத் திரும்ப எடுப்பதற்காக வர்ந்தவர்கள் பெட்டியில் கைகள் கட்டப்பட்டு உயிருடன் இருந்த முதியவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவரது தம்பி சரவணனிடம்கேட்டபோது,இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போய்விடும் என்று கூறியுள்ளார்.
பின்னர், பெட்டியை எடுக்க வந்தவர்கள், 108க்குப் போன் செய்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.