’’என்னம்மா கண்ணு…’’ நடிகர் சத்யராஜுக்கு பிறந்தநாள்…குவியும் வாழ்த்து

நடிகர் சத்யராஜுக்கு இன்று 66 அவது பிறந்தநாள்…

நடிகர் சத்யராஜுக்கு இன்று 66 அவது பிறந்தநாள்…

இந்திய திரையுலகில் உள்ள மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சத்யராஜ். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சத்தியராஜ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி1,2ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தனது இரண்டாம் அத்தியாயத்தை  தொடங்கியுள்ளார்.

ஆனால் தன் திரையுலக வாழ்வில் பல கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்து, வில்லனாக நடித்து, இன்று புகழேணியில் உள்ளார்.

ஆரம்ப காலத்தில் அவர் ரஜினி( மிஸ்டர் பாரத்), கமல்(விக்ரம்)  போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பின் சிறந்த நடிகராக புகழ்பெற்றார். அதன்பின் அவர் வால்டர் வெற்றிவேல், இங்கிலீஸ்ஜ்காரன், ஜீவா, நடிகன், அமைதிப்படை  போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.

இன்று ஒரு புதிய இயக்குநரின் சிந்தையில் உள்ள அப்பா, மாமா, போன்ற கேரக்டர்களுக்கு அனைவரும் அணுகுவது அவரைத்தான். இன்று தனது 66 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் சத்யராஜுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அவர் மேலும் மிகச் சிறந்த கதாப்பாத்திரங்களில் நடிக்க நாமும் அவரை வாழ்த்துவோம்.

Exit mobile version