கேரளத்தில் சிறுபான்மையினருக்கு மறுக்கப்பட்ட கல்வி உதவித்தொகை… உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு!!

கேரளத்தில் முஸ்லீம்-கிறிஸ்தவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் (80:20) திட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க கேரள மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

டெல்லி,
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கேரளா மாநிலத்தில் 45.27 சதவீதம் பேர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதில் முக்கியமாக 26.56 சதவீத முஸ்லீம்களும் 18.38 சதவீத கிறிஸ்தவர்களும் உள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள 3.3 கோடி மக்கள் தொகையில் இந்துக்கள் 54.73 சதவீதம் உள்ளனர். இதன் பொருள், 45.27 % சிறுபான்மையினரில் 58.67 சதவீதம் முஸ்லிம்களும் 40.6 சதவீதம் கிறிஸ்தவர்களும், மீதமுள்ள 0.73% பிற சிறுபான்மை சமூகங்களும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மே 28ம் தேதி அன்று,கேரள மாநிலத்தில் உள்ள பிற சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு மாநில அரசு தேவையற்ற முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டி பாலகாட்டை சேர்ந்த ஜஸ்டின் பள்ளிவாத்துக்கள் என்பவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரந்த பொதுநல வழக்கில் 80:20 திட்டத்தை ரத்துசெய்ததோடு,சிறுபான்மையினர் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், கேரளா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து “Minority Indians Planning and Vigilance Trust” என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஸ் பிரன், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார், ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போதைக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என கூறினார்.

ஆனால் மனு தரர் வழக்கறிஞர் ஹரீஸ் பிரன், கேரள உயர்நீதிமன்ற இத்திட்டத்திற்கு தடை விதிபதற்கு முன்பு 13 வருடங்களாக இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது என்பதை வாதமாக முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இடைக்கால தடை விதிக்க அழுத்தம் கொடுத்தால் மனுவை தள்ளுபடி செய்வோம் என கூறி மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க எதிர்மனுதார்களான ஜஸ்டின் பள்ளிவத்துகள், கேரளா அரசு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Exit mobile version