பள்ளி திறப்புப்பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து முதல்-அமைச்சர்தான் பள்ளி திறப்புப்பற்றி முடிவுகளை மேற்கொள்வார்,என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் நேற்று முதல் அமல் படுத்தப்பட்ட நிலையில், இந்த தளர்வில் நூலகமும் உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

160 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள சுமார் 3,00,785 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை சந்திக்க அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும் என்றும் மாணவர்கள், தேர்வர்கள் நூலகம் சென்று படிக்கலாம் எனவும் புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது எனவும் அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் விரைவில் வெளியிடுவார்.

1 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 10 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என நம்ப படுகிறது.அரசு பள்ளிகளை நாடிவரும் அளவுக்கு, அரசு பள்ளிகளின் நிலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு மாணவர்சேர்க்கை பலமடங்கு உயர்ந்துள்ளது.

பள்ளிகள் திறப்பு பற்றி இப்போது யோசிக்கும் நிலை இல்லை எனவும் இந்த மாதம் இறுதிவரை பள்ளிகள் மூடப்பட்டுதான் இருக்கும். அதன்பிறகு கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து முதல்-அமைச்சர்தான் முடிவுகளை மேற்கொள்வார்.என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Exit mobile version