மாரிதாஸ் கைது… மேடையிலேயே செருப்பை கழற்றி அரசை எச்சரித்த சீமான்!!


மாரிதாஸ் கைது விவகாரம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து சீமான் விழா மேடையில் செருப்பை கழற்றி திமுகவை விமர்சித்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை எனினும் 4 நாட்களில் வழக்கில் இருந்து வந்துள்ளார். இது தமிழக அரசுக்கு அவமானம் எனவும் திமுக அரசு தான் உண்மையான  சங்கி எனக்கூறி தன் காலில் இருந்த செருப்பை தூக்கி காண்பித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார். இதனால் அங்கு அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் அதிருப்திக்கு உள்ளாகினர்.

சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்?

அப்படி என்றால் யார் சங்கிகள்? என்று திமுக அரசினை கடுமையாக விமர்சித்தார். அப்போது,  திடீரென்று தனது காலில் இருந்த செருப்பை கழட்டி காண்பித்தார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. 

மேலும் பேசிய சீமான் நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்றும் பேசி எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version