சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தி மு க MLA கு. க. செல்வம்?

1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த, அந்த கட்சியின் தலைமை நிலைய செயலாளரான சென்னை ஆயிரம் விளக்கு தி.மு.க. MLA கு.க. செல்வம் இன்று பா. ஜ. க வில் இணைந்தார்.

தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பதவி  கிடைக்காத அதிருப்தியில் அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் டெல்லி சென்ற கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் நட்டா வீட்டிற்கு சென்றார் .பின்னர் நட்டா முன்னிலையில் கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்.கு. க. செல்வம் பா. ஜ. வில் இணைந்தது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Exit mobile version