20 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் நடிகை – அதுவும் முன்னணி நடிகர் படத்தில்..?

நடிகர் அ‌ஜித் தமிழ் திரை உலகில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் மே மாதம் முதல் தேதியில் 1971 ல் ஐதராபாத்தில் பிறந்தார். இவரது சினிமா துறை வாழ்க்கை 1990 ல் தொடங்கியது. அதிலிருந்து இவர் பல தடைகளை மீறி வெற்றி பெற்று இருக்கிறார். இவரது உழைப்பின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் தமிழ் சினிமா வரலாற்றில் காதல் கோட்டை, அவள் வருவாளா என்ற படத்தில் பெண்களுக்கு பிடித்த காதல் மன்னனாக இருந்தவர். அமர்க்களம் படத்தின் மூலம் அதிரடி கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

அதிலிருந்து இவர் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். இன்னும் பல வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார் இன்னும் கொடுத்து கொண்டே இருக்கிறார். இவரது வெற்றி என்பது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும்.

காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி அந்த கால இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் ஷாலினி. அமர்க்களம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த இருந்தனர். படம் நடித்து கொண்டிருக்கும் போதே அ‌ஜித் ஷாலினியை காதலித்தார். பின் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவ‌ர் மணிரத்தினம் படத்தில் நடித்துவருகிறார். ஆம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மணிரத்னத்தின் படம் என்பதால் அ‌ஜித் ஒப்பு கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு ஷாலினி நடிப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version