செம ட்ரெண்ட்… சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’… ‘சோ பேபி’ பாடல் சூப்பர் சாதனை…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ‘சோ பேபி’ பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்‌.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அர்ச்சனா ,வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

‘டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . மேலும் சமீபத்தில் வெளியான சோ பேபி பாடல் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது .

இந்நிலையில் இந்த பாடல் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வருகிற மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version