காற்றில் கரைந்த தேவதை!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடல் நாளை மாலை சென்னை கொண்டுவரப்பட உள்ளது.

பவதாரணி, திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

ராசய்யா என்ற படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version