இந்தியாவில் அதிகரித்த ஒமிக்ரான் தொற்று… மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி எண்ணிக்கை!!


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.

டெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. அதே போல் ஒமைக்ரான் வகை கொரோனாவும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள் படி, நாடு முழுவதும் இதுவரை 200 பேர் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 77 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் தலா 54 பேரும்,
தெலங்கானாவில் 20 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், உ.பி.யில் 2 பேரும், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் தலா ஒருவரும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலை அடுத்து விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளன.

Exit mobile version