‘சிம்புவுக்கு கல்யாணம் நடக்கணும்…’ மண்டியிட்டு ரசிகர்கள் வேண்டுதல்…

சிம்புவுக்கு திருமணம் நடக்க ரசிகர்கள் மண்டியிட்டு பிரார்த்தனை.

தமிழ் சினிமாவில் இளம்நடிகர்களில் ஒருவர் சிம்பு. அவர் தான் நடித்த சமீபத்திய பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்த படம் வெற்றிப் பெற வேண்டுமென தீவிரமாக உழைத்து வருகிறார்.

அவர் தனது உடல் எடையைக் குறைக்க விஷேஷ் பயிற்சிகளும் எடுத்து வருகிறார்.

வெங்கட்பிரபு அரசியல் சம்பந்தமாக ஒரு படம் எடுக்கிறார். அப்படத்தின் பெயர் மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்க்காகவும் சிம்பு தயார் நிலையில், குறைந்த காலத்தில் இப்பட வேலைகள் முடிய வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர் மன்றத் தலைவர் மதன், சிம்புவுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெற வேண்டி, முருகன் கோயிலில் மண்டியிட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

Exit mobile version