ரிலையன்ஸ் நிறுவனத்தில் குவியும் முதலீடு: ‘சில்வர் லேக்’ நிறுவனம் 1,875 கோடி முதலீடு

ரிலையன்ஸ் நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனத்த்தின் முதலீட்டாளர்கள் இணைந்து 1875 கோடி முதலீடு செய்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் சில்வர் லேக் நிறுவனத்த்தின் முதலீட்டாளர்கள் இணைந்து 1875 கோடி முதலீடு செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்தொகஒயை முதலீடு செய்தன.

இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. அத்துடன் முகேஷ் அம்பானி கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RIL) தனியார் ஈக்விட்டி நிறுவனமான சில்வர் லேக்கின் இணை முதலீட்டாளர்கள் மேலும்ரூ.1875 கோடியை ரீடெயில் பிரிவில் முதலீடு செய்யப்போவதக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, ரிலையன்ஸ் சில்லறை விற்பனை ப்ரி மணி(pre money) பங்கு மதிப்பு 4.285 லட்சம் கோடி என்று ஆஐஎல்-மதிப்பிட்டுள்ளது.

Exit mobile version