உலகை மகிழ்வித்த கலைஞன் நம்மை விட்டு மறைந்தார் – சிம்பு இரங்கல்…

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நல கேடாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். ஆனால் அவர் சரியாகி வருவதாக அவ்வப்போது தகவல் வெளியானது. அந்த தகவலின் பேரால் அனைவரும் ஆனந்தமாக இருந்தனர்.

ஆனால் நேற்று நடந்தது அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரின் ரசிகர்களும் திரை உலகை சேர்ந்து அனைவரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில் சிம்புவும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் அப்போது ஒரு அறிக்கை விட்டிருந்தார் அதில் குறிப்பிட்டிருந்தது யாதெனில் “என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார். குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள். என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.

அதைப்போல… “காதல் அழிவதில்லை” படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் “இவன்தான் நாயகன்” என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார். முதன் முதலில் “இவன் தான் நாயகன்” என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர். விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே. லவ் யூ” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version