ஒமிக்ரானை எதிர்க்கத் தயாரான சிங்கப்பூர் அரசு!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்த சூழலில், ஆப்ரிக்கா நாடாக போட்ஸ்வனாவில் கண்டறியப்பட்ட ஒமைக்கிரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து வருவோர் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆப்ரிக்கா நாடுகள், சீனா, மொரீசியஸ், சிங்கப்பூர், இஸ்ரேல், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ்-ன் திரிபான ஒமிக்ரான் உலகளாவிய சந்தைகளை உலுக்கி வருகிறது இதனை சிங்கப்பூர் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கொரோனா வைரசிற்கு இரண்டு தடுப்பூசி போட்ட வெளிநாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் தனது எல்லைகளை திறந்து உள்ளது. ஆனால் இந்த திரிபு வைரசான ஒமிக்ரான் பரவலால் மீண்டும் அது வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கான எல்லைகளை மூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் தனது எல்லைகளை மீண்டும் முழுமையாக மூடும் யோசனையில் சிங்கப்பூர் அரசு இல்லை என்பது தெளிவாகிறது.

ஒமிக்ரான் பரவுவதற்கான வாய்ப்பு அது பெரும் தொற்றாக மாறுவதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போது கணிக்க முடியாது என்பதால் சிறிது காத்திருக்க வேண்டும் என நிபுணர்கள் சிங்கப்பூர் அரசிற்கு அறிவுரைகள் கூறி வருகின்றனர்.

ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இந்த வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டினருக்கு தங்களது நாட்டில் அனுமதி இல்லை என்று கூறி தங்களது எல்லை பகுதிகளை மூடி வைத்துள்ளது.

ஆனால் சிங்கப்பூருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வெளிநாட்டினர் தங்களது நாட்டிற்குள் வரவும் அதற்கு முன்னதாக பல கட்ட சோதனைகளை நடத்தி சோதனைகளை முடுக்கி பயண மற்றும் சமூக தடைகளை மேலும் தளர்த்துவது குறித்தும் சிங்கப்பூர் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த ஒமிக்ரான் தொற்று குறித்து நிபுணர்கள் பேசும்போது இது பெரும் தொற்றாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னவென்று தெரியாத இந்த நேரத்தில் பொது முடக்கம் போன்ற பெரிய நடைமுறைகளை தற்போதைக்கு கையாள வேண்டிய அவசியமில்லை என்று அரசுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.  மருத்துவ பள்ளியின் நோயெதிர்ப்பு துறையின் இணை பேராசிரியரான ஆஷ்லே செயின்ட் ஜான் என்பவர் தெரிவிக்கும் பொழுது ஒமிக்ரானை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது சாதாரண ஒன்றாக தான் கருதவில்லை என்றாலும் பல பல்வேறு கட்ட சோதனைகள் உட்பட பல நடவடிக்கைகள் இருக்கின்ற பொழுது நாம் சற்று கவனமாக இருந்து சோதனைகளை தீவிரப்படுத்துவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் 85 சதவிகித மக்கள் கொரோனாவிற்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதங்களில் ஒன்றாக கணக்கிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிங்கப்பூரின் மருத்துவ கட்டமைப்பு மற்றும் சுகாதாரத் துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருவதால் அங்கு தோற்று மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பெரிதும் நம்பியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு அடுத்து அதன் திரிபான டெல்டா மாறுபாடு கோவிட்டை முழுமையாக ஒழிப்பது என்பது சாத்தியமற்றது என்பதை வெளிப்படுத்தியது. அதன் பின்னர் சிங்கப்பூரில் வைரசுடன் வாழ பழகி கொள்ளும் வாழ்க்கை முறைக்கு மாறியது.

ஒமிக்ரான் தொற்று ஒரு நாட்டில் பரவ வேண்டியது இருந்தால் அது பரவி தான் ஆகும் என சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தோற்று நோய் நிபுணர் லியோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அரசு இந்தப் புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரசுக்காக எல்லாம் தனது நாட்டின் எல்லையை மூட வேண்டுமா என யோசிப்பதிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது.

ஏனெனில் அங்குள்ள மக்கள் 85 சதவிகிதம் பேர் கொரோனாவிற்கு எதிரான இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் அங்கு சுகாதார கட்டமைப்பும் மிகவும் வலுவாக உள்ளது.

அதிக விகிதங்களில் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட போர்ச்சுக்கல் நாட்டில் ஒமிக்ரான் தொற்று பரவல் பாதிப்பினை குறைவாகவே ஏற்படுத்தி உள்ளதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று லியோங் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவல் எப்படி இருக்கும் என்றே தெரியாத இந்த நேரத்தில் சிங்கப்பூரின் எல்லைகளை மூடுவதால் பொருளாதார இழப்பு மட்டுமே மிஞ்சும்.

அதுவே அது மோசமானதாக இருந்தால் சுகாதார அமைப்பில் ஒரு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தும்.  நாம் covid-19 வைரஸ் உடன் வாழ்வதை நோக்கி முன்னேறுவோம் என்று தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரானை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகளை நாம் செயல்படுத்த வேண்டும் வரும் காலங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.

சிங்கப்பூரில் தொற்று வெகுவாக பரவுவதை இந்த அரசு அனுமதிக்காது. டெல்டா வைரஸ் உடன் எப்படி வாழ கற்றுக் கொண்டோமோ அதே போலவே இந்த இந்த ஒமிக்ரான் வைரசுடன் வாழ மக்கள் விரைவில் பழகிக் கொள்வோம் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version