அரசுத்துறை சார்பாக நாட்காட்டி (Calendar) அச்சிட்டு வெளியிடப்படுவது நிறுத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிரொலி.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 5000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கால் அச்சக தொழில் முடங்கியிருந்த நிலையில் பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததால் அச்சக முகவர்கள் தயாராகினர்.
அரசுத் துறைகள் சார்பாக காலண்டர், டைரி உள்ளிட்டவை அச்சிட்டு கைப்பிரதியாக வழங்குவதை இந்த ஆண்டுடன் நிறுத்த மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அச்சுப்பணி நிறுத்தப்பட்டால் பல லட்சம் அச்சகத் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்றும் அச்சக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வெண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.