திண்டிவனம் அருகே சாலை விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version