இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,984 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக சில மாநிலங்களில் கொரோனா பரவும் நேர்மறை சதவீதம் அதிகரித்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்களின்படி நாடு முழுவதும் 6,984 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை என்பது 3,47,10,628 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,168 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,41,46,931 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அதே நேரத்தில் இன்று மட்டும் 247 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். மொத்தமாக 4,76,135 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 87,562 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.38 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.37 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 68,89,025 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 1,34,61,14,483 டோஸ்கள் தடுப்பூசி இந்தியாவில் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.