கோவை வால்பாறை அட்டகட்டி பகுதியில் வனமேலாண்மை மையத்தில் பாம்புகளை கையாளும் முறைகள் பற்றிய பயிற்சிகளை முன்கள பணியாளர்கள் பெற்றனர். முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனரின் ஆணைப்படி வனமேலாண்மை பயிற்சி மையத்தில் பாம்புகளை கையாளும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமை தாங்கினார். பயிற்சியில் வால்பாறை, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதிகளைச் சேர்ந்த வனப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வால்பாறையில் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகும் பாம்புகளை வனத்துறையினர், தீயணைப்பு படையினர் பிடித்து வனப்பகுதியில் விடுகின்றனர். இவ்வாறு பாம்புகளை பிடிக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்த பயிற்சியின் போது எடுத்துக் கூறப்பட்டது. துன்புறுத்தி பிடிக்க கூடாது பாம்புகளை பிடிக்கும்போது அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு விடக்கூடாது. பாம்புகளை துன்புறுத்தி பிடிக்க கூடாது. விஷத் தன்மை கொண்ட பாம்புகளை கவனமாக பிடிக்க வேண்டும். பாம்புகளை பிடிப்பதற்காக உள்ள ஆயுதங்களை பயன்படுத்தி தான் பிடிக்க வேண்டும். பிடித்த பாம்புகளை விரைவாக வனப் பகுதியில் கொண்டு போய் விட வேண்டும். பிடிக்கப்படும் பாம்புகள் வனப் பகுதியில் விடப்படும் போது அவைகள் உயிர் வாழும் வகையில் இருக்க வேண்டும். பாம்புகளும் வனப் பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் என்பதால் மிகவும் கவனமுடன் பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும். விழிப்புணர்வு மேலும் பாம்புகளின் சிறப்பு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். குடியிருப்புக்குள் பாம்பு புகுந்துவிட்டால் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்பு படையினருக்கு தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாம்பு பிடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பாம்புகளை எவ்வாறு கையாள வேண்டும் வால்பாறையில் பயிற்சி
-
By mukesh

Related Content
கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்
By
daniel
December 17, 2025
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025