திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை யாரோ ஒரு மர்மநபர் நடுஇரவில் உடைக்க முற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர்.
அதுகுறித்து காவல் ஆனார்கள் எதுமே செய்யாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை கைது செய்து தீரவேண்டும் என விடாமல் கூறி வந்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நேரில் சந்தித்து திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்ததோடு, போராட்டத்திலும் பங்கேற்றார்.
இந்த பக்கம் இவர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இந்த நிலையில் அவரது சொந்த ஊரான தண்டபத்திலுள்ள வீட்டு முன்பு நின்றிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இது யாரென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அதில் அவர் காரை உடைத்தபோது cctv கேமராவில் பதிவான காட்சிகள் கிடைத்துள்ளது. மெஞ்ஞானபுரம் போலீசார் இந்த cctv பதிவை கொண்டு அவர்கள் விசாரணையை பலப்படுத்தி குற்றவாளியை தேடி வருகின்றனர்.