திருமண மண்டபத்தில் மொய் பணம் திருட்டு:ஆசாமி கைது

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேடை அருகில் மணமகன் நவீனின் உறவினர் மற்றும் நண்பர்கள் அவரிடம் கல்யாணப்பெண் மற்றும் ஆணின் நண்பர்கள் இவர்களுக்கு பரிசு மற்றும் மொய் பணத்தை கொடுத்துள்ளனர்.

அப்போது, மேடையில் இருந்த மர்ம நபர் மணமகன் நவீன் வைத்திருந்த பையில் ரூ.42 ஆயிரம் மொய் பணத்தை திருடிவிட்டு மாயமானார். இதனை கவனித்த கல்யாண வீட்டார் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மண்டபத்தில் எடுத்த வீடியோ காட்சிகள் மற்றும் மண்டபம் அருகாமை கடைகளில் இருந்த இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, தேர்வாய் காலனி பகுதியை சேர்ந்த ஈசன்(எ)வெங்கடேசன் மொய் பணத்தை திருடியது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் வெங்கடேசன் என்பவர் வெள்ளி வெட்டி இல்லாமல் ஊரை சுற்றி வந்ததாகவும், கல்யாணவீட்டுக்கு சும்மா சாப்பிட்டு விட்டு போக வந்ததாகவும், பின்னர் மொய் எழுதும் இடத்தில நண்பனை போல அமர்ந்து பின்னர் அங்கு மணமகன் நவீன் அருகே யாரும் இல்லாத நேரத்தில் மொய் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

Exit mobile version