பாடகர் எஸ். பி.பி. யின் உடல்நிலையில் முன்னேற்றம்…

எஸ்.பி.பி குணமடைய வேண்டிய இன்று கூட்டுப் பிராத்தனை; ரசிகர்களும் பங்கேற்ற அழைப்பு
கொரோனா தொற்று காரணமாக பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணி சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்தார்.

கடந்த வாரம் அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் குறித்த தகவல்களை எஸ்.பி.பி சரண் வீடியோ மூலம் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது நுரையீரலில் ரத்தகசிவு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். அவர் மீண்டுவர திரையுலகினர் பிரார்த்தனை செய்தனர்.தற்போது அவரது உடல்நிலை சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு, மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் ‘ஆக்ஸிஜன்’ அளிக்கப்பட்டு வருகிறது என்றும், உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கிவரும் நிலையில், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும். அவரது உடல்நிலையில், கடந்த சில நாட்களைக் காட்டிலும் நேற்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Exit mobile version