பண்டிகை காலச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு…புதிய வழிகாட்டல் வெளியீடு!

பண்டிகை காலச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது நாட்டில் மத்திய கொரொனா கால 5 வது கட்ட ஊரடங்கு தளவுகளை அறிவித்துள்ளது.

எனவே அக்டோபார் மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதை அடுத்து,பண்டிகை காலங்களுக்கான சிறப்பு ரயில்களை ரயில்வேதுறை அறிவித்துள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

மேலும், ரயில் பயண பேசஞ்சர்களுக்காக ரயில்வே பாதுக்காப்புப் படையினர் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா தொற்று எவருக்காவது உறுதியாகியிருந்தால் அவர்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுள்ளது. முகியமாக பொதுஇடங்களில் எச்சில் துப்பக்கூடாது, பயணிகள் இடைவெளி விட்டு உட்கார வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Exit mobile version