இலங்கை போதை பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் கைது

இலங்கை போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து படகு மூலமாக ஹெராயின் 95 கிலோ மெத்தாம்பிட்டமின் 18 ,  ஆகியவற்றை கடத்தி வந்த கும்பலை தூத்துக்குடி கடல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கடத்தல் கும்பலிடமிருந்து ஐந்து கைத்துப்பாக்கிகள் , செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த நவாஸ் மற்றும் அப்ஃனாஸ் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சென்னை அடுத்த காரப்பாக்கத்தில் இருவரும் வசிப்பது தெரிய வந்தது. அவர்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களில் நவாஸ் பாஸ்போர்ட் காலாவதியாகி 10 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்துள்ளார். அப்ஃனாஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கியுள்ளார் என தெரியவந்தது. போதைப்பொருள் கடத்தல் மன்னன் நவாஸை பிடிப்பதற்காக இலங்கை அரசு சார்பில் “ரெட் கார்னர் நோட்டீஸ்” விடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version