இலங்கை நிழல் உலக தாதா இறப்பு உறுதி: DNA டெஸ்ட் ரிப்போர்ட் இதோ!!

கோவையில் உயிரிழந்தது இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா தான் என டி.என்.ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது..

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி கோவை சேரன் மாநகரில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னன் மாராடைப்பால் உயிரிழந்தார். பெயர் , முகவரி உட்பட போலியான ஆவணங்கள் மூலம் கோவையில் இருந்த அவருக்கு பிரேத பரிசோதனை செய்து மதுரையில் அங்கொட லொக்காவின் உடல் எரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இறந்தது அங்கொட லொக்காதான் என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய DNA பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் கொரொனா தொற்று காரணமாக பணிகள் முடங்கின.

இந்நிலையில் இலங்கை அரசின் உதவியுடன் அங்கொடா லொக்காவின் தாயார் சந்திரிகா பெரேராவின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , அங்கொட லொக்காவின் DNA மாதிரிகளிடன் ஓப்பீடு செய்யப்பட்டதில் கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்காதான் என முடிவுகள் தெரியவந்துள்ளது.

Exit mobile version