மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்

மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பறக்கும் மேம்பால சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதுரவாயல் – துறைமுகம் இடையேயான பறக்கும் மேம்பால சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பறக்கும் சாலை திட்டம்
கருணாநிதி ஆட்சியில் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்றன. 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட 19 கி.மீ. தொலைவினைக் கனரக வாகனங்கள் அரை மணி நேரத்திற்குள்ளாக துறைமுகத்தினை அடைய முடியும் என்பதால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா காழ்ப்புணர்வு காரணமாக, பறக்கும் சாலைப் பணியினை முடக்கிப் போட்டார். மத்திய இணையமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்பணி விரைவுபடுத்தப்படும் என அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

அபரிமிதமான தாமதம்
தற்போது, மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்த பிறகு, இதனை 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்ற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

பறக்கும் சாலை மேம்பாலத்திற்காக ஏற்கெனவே தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரடுக்கு மேம்பாலம் என்பது இதன் கட்டுமானத்தை முற்றிலும் மாற்றி அமைத்து, குலைக்கின்ற மேலும் அபரிமிதமான காலதாமதம் ஏற்படுத்தும் அறிவிப்பாகும். பறக்கும் சாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version