ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தம்!

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றுபவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள சூலூர்பேட்டையில் உள்ள 3 குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுவர்ணமுகி நகரில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் 2 பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள திட உந்துவிசை விண்வெளி பூஸ்டர் ஆலையில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் உடனடியாக நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருந்ததால் அதை மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. தற்போது அந்த இடம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரிப்பதன் நடவடிக்கையாக  ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அனைத்து பணிகள் நிறுத்தப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என்றும் நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version