சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரக காவல் ஆணையராக இருப்பவர் சங்கர் ஜிவால். சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அருகிலிருந்த காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் காவல் ஆணையரின் சொந்த வாகனத்திலேயே அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.