சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ரூ.1000 கோடி வருவாயை மறைத்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ.1000 கோடி வருவாயை மறைத்தது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமாகியுள்ளது. மேலும், கணக்கில்வராத ரூ.10 கோடி, ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், ஜவுளிகள், நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி ரொக்கம் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும் வருமான வரித்துறையின் சோதனையில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.