வினாத்தாள்கள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து விட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வான இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள்கள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக மகாராஷ்டிரா டெல்லி ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் விஸ்வநாத் குமார் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தேர்வினை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரரவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து இருந்தோம் ஏன் மீண்டும் மீண்டும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது சம்பந்தமான விவகாரங்களில் நீதிமன்றத்தின் தலையீடு பெரும் குழப்பத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும்.
மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது வேறு மாதிரியாக புரிந்து கொள்ளப்பட்டு மாணவர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்!! எனவே, மனுக்களை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் என கூறி உத்தரவிட்டனர்.