இந்தியா வந்தது இதற்க்கு தான் வேறு எந்த காரணமும் இல்லை – உண்மையை உடைத்த ரெய்னா.
ஐபிஎல் தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இதற்காக இந்தியாவிலிருந்து இந்திய வீரர்கள் பலர் ஏற்கனவே துபாய் மற்றும் அபுதாபி சென்று தனிமைப்படுத்தி கொண்டனர். அதன்பிறகு தற்போது இயல்புநிலை பயிற்சிக்கும் திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில்
தான் ஐ.பி.எல் போட்டியை விட்டுவிட்டு இந்தியா வந்ததற்கான காரணம் இதுதான் என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ரெய்னா. ரெய்னா திடீர் என்று ஐ.பி.எல் போட்டியை விட்டு வந்ததற்க்கான் காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பிபோன நிலையல் இப்போது அந்த சந்தேகத்தை தீர்த்தார் ரெய்னா.
அவர் இந்தியா வந்ததற்க்கு பல காரணங்கள் கூறப்பட்டது. சிலர் அவர் சொந்த விஷியங்களுக்காக வந்தார் என்றனர். சிலரோ, அவருக்கு தோனியை போல் தனி அறை தராததே இதற்க்கு காரணம் என்றனர்.
ஆனால் உண்மையான காரணம் இதுதான், இன்று வரை எனது குடும்பத்தினர்களுக்கு நடந்த அந்த சம்பவத்தை யார் செய்தார் என்று தெரியவில்லை. எனது மாமா மருத்துவமனையில் இறந்து விட்டார். அத்தை மற்றும் அத்தை மகன்கள், அவர்களுடன் மேலும் ஒரு வயதானவர் என அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனது மாமாவின் மகன் நேற்று இந்த சம்பவத்தினால் உயிரிழந்திருக்கிறார் என கூறியுள்ளார்.