இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்பாக பலரும் அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் சூர்யாவும் இதற்கு குரல் குடுக்கும் வகையில் கடிதம் ஒன்று வெளியிட்டார். அந்த கடிதமானது பல் விமர்சங்களை சம்பாதித்தது.
அனால் பலரும் அவருக்கு ஆதரவாகவே பேசி வந்தனர். அனால் அந்த கடிதத்தில் ஓர் இடத்தில அவர் “இதற்கிடையே, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் என எழுதினார். அதற்கு பாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதனால் அவர் மீது வழக்கும் தொடுத்தனர். அதனை ஆராய்ந்து பார்த்த நீதி மன்றம் சூர்யா மீது தவறு இல்லை அவர் அவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டது எந்த வித தவறும் இல்லை என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதற்கு நன்றி கூறும் விதமாக அவர் தன ட்விட்டர் பக்கத்தில் இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்திய நீதித்துறை தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்கிறது.
நீதித்துறையின் பெருந்தன்மையை ஏற்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.