’’நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம்’’ – விஜய் சேதுபதி படத்தை பாராட்டிய சூர்யா !

நடிகர் விஜய் சேதுபதி படத்தை பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

நடிகர் விஜய் சேதுபதி படத்தை பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் க/பெ ரணசிங்கம்.  இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ் இயக்கியுள்ளார்.

.இப்படம் வேறெந்தப் படமும்  இல்லாத விதத்தில் இந்தி, தெலுங்கு கன்னடம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் ஜீ ஒடிடியில் வெளியானது.

விஜய் சேதுபதியின் படம் இதற்கு இவ்வாறு ரிலீசானதில்லை என்பதால் அவரது ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தில்  கவிப்பேரரசு வைரமுத்து ஜிப்ரான் இசையில் எழுதிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் நேர்மறையான விமர்சனம் கொடுத்து பாராட்டி வருவதால் இப்படக்குழுவினர் மகிழ்ந்துள்ளனர்.

நேற்று நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்துப் பாராட்டி ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில். அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் #KaPaeRanasingam

இயக்குனர் @pkvirumandi1 @VijaySethuOffl @aishu_dil @GhibranOfficial @BhavaniSre @kjr_studios @ZEE5Tamil

மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Exit mobile version