2020-ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் : மோடியை முந்திய அந்த நபர் யார்???

2020-ஆம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலமாக மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இருக்கிறார். இவர் பிரதமர் மோடியை விடவும் அதிகமாக தேடப்பட்ட நபராக இருக்கிறார்.
Sushant Singh Rajput

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியின் கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார்.

இவரது மரணம் திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்தது. மேலும், அவரின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்றும், அதற்கு நியாயம் வேண்டும் என்றும் பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, சுஷாந்தின் வழக்கை தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துக் வருகிறார்கள். இந்த வழக்கு விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது. மேலும், பல நடிகர், நடிகைகளும் விசாரனை வளையத்திற்கும் கொண்டு வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.

இந்நிலையில், 2020-ஆம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சுஷாந்த்திற்கு அடுத்தப்படியாக, நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்திலும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலியான நடிகை ரியா சக்ரபர்த்தி மூன்றாவது இடத்திலும்  இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கூகுளில் அதிகம் தேடப்பட்டு வரும் நபர் பட்டியலில், முதலிடத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆண்டு பிரதமர் மோடி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் :

நடிகர்கள் :

அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலிலும் சுஷாந்த் தான் முதலிடத்தில் உள்ளார். சுஷாந்தை அடுத்து அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், சல்மான் கான், இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.

நடிகைகள் :

அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் ரியா சக்ரபர்த்தி முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து கங்கனா ரனாவத், தீபிகா படுகோன், சன்னி லியோன், ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள்.

டாப் நியூஸ்மேக்கர்ஸ் பிரவு :

டாப் நியூஸ்மேக்கர்ஸ் பிரவில் மோடி முதலிடத்திலும், சுஷாந்த்-ரியா கூட்டாக இரண்டாவது இடத்திலும், ராகுல் காந்தி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்கள் : கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று தடை… பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு!!

Exit mobile version