கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆக.21 வரை நீதிமன்றக்காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆக.21 வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கை என்ஐஏ விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரக முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயன் மனைவி சௌமியா, ரமீஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கக் கடத்தலில் ரமீசுடன் தொடர்புடைய 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகின. இதையடுத்து அவரிடம் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் சிவசங்கரன் உள்ளார்.

இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரில் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கேரள தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷூ, சந்தீப் நாயருக்கு ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு எர்ணாகுளம் மாவட்ட சிறையில் அடைக்கப்படுவர்.

Exit mobile version