நாளொன்றுக்கு 10 கிலோ மாமிசம் சாப்பிடும் T23 புலி: வனத்துறை அமைச்சர்

மைசூர் வன விலங்கு மறுவாழ்வு மையத்தில் தங்க உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக உள்ளது. புலியின் உடல்நிலை முழுவதும் குணமடைந்த பின் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருவதா? அல்லது மைசூரிலேயே வைத்து பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மைசூர் வன விலங்கு மறு வாழ்வு மையத்தில்  உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. அதற்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குணமடைந்து வருகிறது. நேற்று அந்த புலி 10 கிலோ மாமிசத்தை சாப்பிட்டுள்ளது. தற்போது டி23 புலி அந்த மையத்தில் உள்ள சிறிய  வன பகுதியில் விடப்பட்டுள்ளது. புலியின் உடல்நிலை முழுவதும் குணமடைந்த பின்னர் தேசிய புலிகள் ஆணையத்தின் ஆணை படி  பரிசீலிக்கபட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருவதா? அல்லது மைசூரிலேயே வைத்து பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யபடும்” என அமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version