நீட் எதிர்ப்பு; 12 மாநில முதல்வர்களுக்கு – தமிழக முதலமைச்சர் கடிதம்..!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக மேற்கு வங்கம்,கேரளா உள்ளிட்ட 12 மாநில முதல்வர்களின் ஆதரவைக் கேட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.மாநில அரசின் மருத்துவ நிறுவனத்தில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும்.கல்வித்துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டும், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தருமாறும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தக் கடிதத்துடன் ஏ.கே ராஜன் குழு சமர்பித்துள்ள அறிக்கையையும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

Exit mobile version