கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

கைவினைப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்த பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையம்

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிகத்தின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பூம்புகார் மெய்நிகர் தோற்ற விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழக கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை வாடிக்கையாளர்கள் எந்த இடத்திலிருந்தும் முப்பரிமாண முறையில் பார்க்க முடியும்.

இந்த மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பத்தை விமான நிலையம், வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் அமைத்து கைவினைப் பொருட்களை எளிதாகச் சந்தைப்படுத்த இயலும்.

கைவினைப் பொருட்கள்

குறிப்பாக, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் கண்காட்சிகளில் மெய்நிகர் தோற்ற தொழில்நுட்பம் மூலம் அக்கைவினைப் பொருட்களை அந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லாமலே, அவற்றை முப்பரிமாண வடிவமைப்பில் வாடிக்கையாளர்கள் பார்த்து இணையதள வழியாக வாங்கக்கூடிய வசதி இதில் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மெய்தோற்ற கைப்பேசி செயலி  மூலம், கைவினைப் பொருட்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்து காட்டி கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version