தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம்-தமிழக அரசு

தமிழகத்தில் இன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் 12 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்று பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.இதன்படி,தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக இருந்த பி.ராஜன் சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக பிரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று, சென்னையில் உரிமை பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு, சட்டம் மற்றும் ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னை உள்ள காவல் நவீன மைய கணினி பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டும், தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

Exit mobile version