தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கபடும்.

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கபடும்.

கொரோனா நோய் தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது தமிழகத்திலும் நோய் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதுவரை 1 லட்சத்தி 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு கடை பிடிக்க பட்டு வருகிறது இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.

பல தனியார் பள்ளிகள் ஆன் லைன் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்து விட்டன. இதனால் தமிழகத்தில் பள்ளிகள்  எப்போது திறக்கப்படும் என்ற நிருபர்களின் கேள்விக்கு, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

மேலும், பெற்றோர்களிடம் கருத்து கேட்டபிறகு 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று
அவர் கூறினார். 

Exit mobile version