வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு ! மக்கள் வரவேற்பு

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

2018 -2019 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொருஆண்டும் ரு.2 1/2  லட்சம் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்யவேண்டும். அத்துடன்வருமான வரம்புக்கு கீழிருந்தாலும் அவர்கள் கணக்குத் தாக்கல் செய்யவேண்டுமென்பது கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், 2018- 2019 ஆம் ஆண்டுக்கான அபராதத்துடன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் கடந்த மார்ச்சில் முடிவடைந்தது. இருப்பினும் கொரோனா கால ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது காரணமாக இந்தக் கால அவகாசம் வரிசெலுத்துவோருக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய கடைசிநாள் நவம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version