1ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…

கேரள மாநிலத்தில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலம்பூரையடுத்த சீரக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஃபிக். இவர் கடந்த 2012ம் ஆண்டு தனியார் பள்ளியில் நன்னெறி அறிவியல் பாடத்தின் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மாணவ, மாணவிகள் பள்ளி நிர்வாகம் சார்பில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுற்றுலாவை முடித்து விட்டு திரும்பி வருகையில், 1ம் வகுப்பு மாணவி உடல் அசதியில் இருந்துள்ளார். அப்போது, அவரை கடைசி இருக்கையில் வைத்து ஆசிரியர் அப்துல் ரஃபிக் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் அப்துல் ரஃபிக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 20க்கும் மேற்பட்ட சாட்சிகள் மற்றும் 12 மருத்துவ அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு குன்னம் அதிவிரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதில், குற்றவாளி அப்துல் ரஃபிக்கிற்கு ரூ.2.15 லட்சம் அபராதமும், 29 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் 9 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பிற்கு சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

Exit mobile version