ஆளும் கட்சி எம்.எல்.ஏ தலைவர்கள் மீது பொது மக்கள் செருப்பு வீச்சு…

தெலுங்கானாவில் வெள்ள நிவாரணம் வழங்காத ஆத்திரத்தில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ உள்ளிட்ட தலைவர்கள் மீது பொது மக்கள் செருப்பு வீச்சு

தெலுங்கானாவில் மழை சேதத்தைப் பார்வையிட சென்ற ஆளும்கட்சி தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர்கள் மீது மக்கள் ஆத்திரத்தில் செருப்பைக் கழற்றி வீசினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்றான ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ மற்றும் அவர் ஆதரவாளர்கள் காரில் வந்த போது நிவாரண உதவிகள் வழங்காத கோபத்தில் மக்கள் கார் மீது தாக்குதல் நடத்தி தலைவர்கள் மீது செருப்புகளைக் கழற்றி வீசினர்.இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்

Exit mobile version