’’ஆளுங்கட்சித் தலைவர் மீது செருப்பு வீச்சு’’…நிவாரண உதவி கிடைக்காததால் மக்கள் ஆத்திரம்!!!

ஆளுங்கட்சித் தலைவர் மீது செருப்பு வீச்சுசியதால் பெரும் பரபரப்பு.

நாட்டில் ஏற்கனவே அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் இப்போது பருவமழையின் காரணமாக ஆங்காங்கே மழை பரவலாகப் பெய்து வருகிறது. இந்நிலையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி  வழங்காததால் கோபம் அடைந்த மக்கள் ஆளுங்கட்சி தலைவர்கள் மீது செருப்புகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி கிராமத்தில் ஏற்பட்ட மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்குப்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்க ஆளுங்கட்சித் தலைகள் எ.எல்.ஏக்கள் வந்தனர். ஆனால் சிலருக்கு நிவாரணப் பொருட்கள் வாழங்காததால் ஆத்திரமடைந்த மக்கள் செருப்பௌ அவர்களின் கார்கள் மீது வீசினர். பின்னர் போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

Exit mobile version